அடர்ந்த காட்டுக்குள் 5 கிமீ நடந்தே சென்று பழங்குடியின மக்கள் குறைகளை கேட்ட கலெக்டர்
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். காட்டு யானைக் கூட்டங்கள் அதிகம் வசிக்கக்கூடிய யானைப்பள்ளம், சின்னால கோம்பை, சடையன் கோப்பை போன்ற பழங்குடி மக்கள் வாழும் பகுதியான அடர்ந்த காட்டுப்பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதையில் நடந்தே சென்று, அவர்களிடம் மனுக்களைப் பெற்று, தீர்வையும் வழங்கினார்.