"மிகுந்த வேதனை அளிக்கிறது...இதயப்பூர்வமான இரங்கல்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2024-07-03 03:15 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறி உள்ள அவர், இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்