அமைச்சரை பதவி நீக்கம் செய்யவும், அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வருக்கு அதிகாரம் உள்ளதாக
புதுச்சேரி அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சந்திரப்பிரியங்கா பதவி நீக்கம் குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.