சந்திரபாபுவை அதிரவிட்ட FIR...ஆந்திர போலீஸ் செய்த சம்பவம் - பதற்றத்தில் மாநிலம்
தான் எந்தவொரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும், ஆதாரங்களை கேட்டால் போலீசார் தர மறுத்துவிட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, தான் எந்தவொரு முறைகேட்டிலோ, ஊழலிலோ ஈடுபடவில்லை என தெரிவித்தார். உரிய தகவல் ஏதுமின்றி சி.ஐ.டி போலீசார் தன்னை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார். ஆதாரங்களை கேட்டபோது அதனை தர மறுத்த போலீசார், தனது பெயரை தேவையின்றி, முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டினார்.