சந்திரபாபு நாயுடு கைது...பற்றி எரியும் ஆந்திரா - தமிழக எல்லையில் பதற்றம்

Update: 2023-09-09 07:39 GMT

சந்திரபாபு நாயுடு கைது...பற்றி எரியும் ஆந்திரா - தமிழக எல்லையில் பதற்றம்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷை கைது செய்தனர். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். டயர்களை கொளுத்தி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இருமாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்