7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், முன்னதாகக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி பின்பு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேரணி சென்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதீத கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், விரைவு சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து என அனைத்திலும் நவீன கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், குற்றப் பட்டியலில் அம்மாநிலம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரிப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசு விலகுவதற்கான கவுன்டவுன் துவங்கி விட்டதை முதல்வர் கெலாட் அறிவார் என குறிப்பிட்டார். நிரந்தர வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, இன்றைக்கு மற்ற மாநிலங்களில் தண்ணீருக்காக தகராறுகள் நடப்பதாகவும், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துக்கு தண்ணீர் தருவதில்லை எனவும் மறைமுகமாக தமிழ்நாடு - கர்நாடக காவிரி விவகாரத்தை சுட்டிக் காட்டினார்