வைகுண்ட ஏகாதசி-திருப்பதியில் நாளை முதல் டோக்கன் விநியோகம்.. "நேரடி இலவச தரிசனம் ரத்து"

Update: 2023-12-21 11:36 GMT

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதியில் உள்ள 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கவுண்டர்களில், நாளை காலை 6 மணி முதல், வைகுண்ட ஏகாதசி தினமான 23-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 1-ம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் 10 நாட்களுக்கும் சேர்த்து, 4 லட்சத்து 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், 23-ம் தேதி முதல், அடுத்த மாதம் 1-ம் தேதி வரை வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் வழியாக நடைபெறும் நேரடி இலவச தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இலவச தரிசன டோக்கன்கள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், ஸ்ரீவானி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்