CAA விவகாரம்... கொதித்தெழுந்த பினராயி விஜயன் - சுப்ரீம் கோர்ட் படியேறிய கேரள அரசு

Update: 2024-03-16 15:38 GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திமுக, விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம், அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு மார்ச் 11-ம் தேதி அறிவித்தது. இதற்கிடையே, இந்த சட்டத்தை அமல்படுத்த தடை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அசாம் காங்கிரஸ் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கேரளா அரசின் சார்பிலும் இந்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், பாகுபாட்டையும் உருவாக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இச்சட்டத்தை அமல்படுத்த, மனுவை விசாரித்து முடிக்கும் வரை தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்