"ஆங்கிலத்தில் நீளமாக பேசிய பிருந்தா காரத்" "இரண்டே வார்த்தைகளில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர்"
ஒரு திரைப்படத்தில், ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லும் வடிவேலு, தனக்கு ஊத்தாப்பம் எப்படி வேண்டும் என்று சர்வரிடம் விளக்கமாக கூறுவார். நீண்ட நேரம்ஆர்வமுடன் கேட்கும் சர்வர், அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று ஒற்றை வரியில் முடிப்பார். அதுபோன்ற ஒரு ருசிகர சம்பவம், கேரள அரசியல் மேடையில் நடந்துள்ளது. கூட்டம் ஒன்றில் பேசிய சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத், கேரள முன்னாள் முதல்வரும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணாகரனின் மகள் பத்மஜா, பாஜகவில் இணைந்துள்ளார் என்று ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு உடனிருந்த மொழிபெயர்ப்பாளர், "பத்மஜா போயி" என்று சுருக்கமாக கூறியதால், பிருந்தா காரத் உள்பட அனைவரும் சிரித்தனர்.