BREAKING || "இனி முடியாது" ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார் - தமிழகத்திற்கு அதிர்ச்சி அறிவிப்பு

Update: 2023-09-12 07:24 GMT

கர்நாடகா அணிகளில் இனி விடுவதற்கு தண்ணீர் இல்லை, தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் இனி தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்குமா என் பிரச்சனை எழுந்துள்ளது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து

கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதாவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், கர்நாடக அணிகளிலிருந்து இனி தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை என்றும், இருந்தவரை தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது உள்ள தண்ணீர் கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும், குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்