விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
பெங்களூருவை சேர்ந்தவர் தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி. இவரை தொடர்பு கொண்ட பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சைத்ரா குந்தாபூர் என்பவர், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கி தருவதாக கூறி ஐந்து கோடி ரூபாய் பணம் பெற்றிருக்கிறார். சாலை ஓரத்தில் கபாப் கடை நடத்தி வந்த ஒருவரை, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி என கூறி கும்பல் மோசடி செய்த நிலையில், சைத்ரா குந்தாபூர் உட்பட அவரது கூட்டாளிகள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், கடந்த ஏப்ரல் மாதம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு, சைத்ரா மற்றும் அவரது கூட்டாளி ககன் கடூர் என்பவர்களுடன் தொழிலதிபர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, திடீரென பையில் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்வதுபோல் ககன் கடூர் நாடகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.