உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செக்டார் 49ல் நடந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனையில் 5 நாகப் பாம்புகள், 1 மலைப்பாம்பு உட்பட 9 பாம்புகள் மற்றும் 20 மில்லி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. உச்சபட்ச போதைக்கு ஒரு சிலர் பாம்பு விஷத்தைப் பயன்படுத்துவர். ரேவ் பார்ட்டிகளின் போது இவர்கள், பாம்பு மற்றும் பாம்பு விஷத்தைப் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவின் தொடர்பு தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்விஷ் யாதவ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் "பிக் பாஸ் OTT" சீசன்-2 பட்டத்தை வென்றதன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.