காலடி மண்ணால் 120 பேர் பலி...நாட்டை உலுக்கிய கோரத்தில் பாபாசொன்ன வார்த்தையால் வெடிக்கும் பூகம்பம்

Update: 2024-07-20 11:05 GMT

காலடி மண்ணால் 120 பேர் துடித்து பலி

நாட்டை உலுக்கிய கோரத்தில் பாபா

சொன்ன வார்த்தையால் வெடிக்கும் பூகம்பம்

உ.பி. பயங்கரத்தில் சதியா?

ஹத்ராஸில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அனைவரும் ஒரு நாள் இறந்தது தான் ஆக வேண்டும் என போலே பாபா கருத்து கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் அண்மையில் அரங்கேறிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

ஆன்மீக நிகழ்ச்சிக்காக சென்ற பக்தர்கள் 120 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்...

ஆம், உள்ளூரில் பிரபலமான சாமியர் போலே பாபாவால் கடந்த ஜூலை 2ம் தேதி நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் தான் இந்த பயங்கரம் அரங்கேறியது..

இந்த நிகழ்ச்சி குறித்து ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்ட, போலே பாபாவின் பக்தர்கள் கூட்டம் ஹத்ராஸில் குழுமியது...

கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

நிகழ்வில் சொற்பொழிவை முடித்து விட்டு போலே பாபா புறப்பட, அவரது காலடி மண்ணை எடுக்க முண்டியடித்துள்ளனர் பக்தர்கள்...

சுமார் ஆயிரக்கணக்கானோர் திரண்டு காலடி மண்ணை எடுக்க முற்பட்டதில், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் தவித்தனர்.

நீண்ட நேர போராட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான உயிர் அங்கேயே துடிதுடிக்க பிரிந்தது...

மேலும் பலர் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றியும் பலர் உயிரை விட்டனர்..

இவ்விவகாரம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய நிலையில், போலே பாபாவிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது...

அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க

வலியுறுத்தியும் அவரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பியது..

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து போலே பாபா பேசியுள்ளது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து பேசிய அவர், விதியை யாராலும் மாற்ற முடியாது, எல்லாரும் ஒரு நாள் செத்து தானே போகப்போறோம் என பேசியுள்ளார்...

இச்சம்பவத்திற்கு பிறகு, தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ள அவர், நெரிசல் சம்பவத்தின் போது முகத்தை மூடியபடி கூட்டத்தில் இருந்த சிலர் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்து விட்டு காரில் தப்பிச் சென்றதாகவும் கூறுவது உண்மை தான் என்றார்.

கண்டிப்பாக சதி நடந்துள்ளது என அடித்து கூறும் அவர், சனாதனம், சத்தியத்தின் அடிப்படையில் செயல்படும் தங்கள் அமைப்பை சிலர் அழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் சதி அம்பலப்படுத்தப்படும் என்றும், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதாகவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஆனால், விதியை யாராலும் மாற்ற முடியாது என அவர் பேசியிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது..

அத்துடன், 28 ஆண்டுகளுக்கு முன் இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி காவல்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்