வங்கதேசத்தில் அடுத்த பரபரப்பு... ராஜினாமாவால் திடீர் சிக்கல் | Bangladesh

Update: 2024-08-11 08:30 GMT

வங்கதேச வன்முறைகளுக்கு மத்தியில் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்டர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அப்துர் ரூஃப் தாலுக்டர் ராஜினாமா செய்துள்ளார். அவர் தன் ராஜினாமா கடிதத்தை வங்கதேச நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்