பாபா சித்திக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாகிஸ்தானில் இருந்து... வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Update: 2024-10-14 13:17 GMT

கடந்த சனிக்கிழமை இரவு, தனது மகனின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏறிய மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை 3 நபர்கள் கைத்துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 3 குண்டுகள் பாபா சித்திக்கின் உடலை துளைத்தன. லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட சித்திக், வழியிலேயே உயிரிழந்தார். துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஜிகானா கைத்துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. இவை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு கடத்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஷுபு லோங்கரின் சகோதரர் பிரவின் லோங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட இருவருக்கு, பிரவின் லோங்கர் புனேவில் அடைக்கலம் கொடுத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்