அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் - நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

Update: 2024-01-18 08:38 GMT

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான வரும் 22-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும், மாவட்ட நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்க கோரி தலைமை நீதிபதிக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பான பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில், அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை கோடிக்கணக்கானோரின் சமயம், பண்பாடு, வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்