ராணுவத்தினர் மீது தாக்குதல்... 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... ஜம்மு-காஷ்மீரில் பரபரப்பு

Update: 2023-11-17 11:08 GMT

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குல்காம் சாம்னு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்பேரில், ஜம்மு-காஷ்மீர் போலீசார், சி.ஆர்.பி.எஃப். படையினருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சாம்னு பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தபோது, ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்