சுக்குநூறாக உடைந்த ராணுவ விமானம்...8 பேருக்கு நேர்ந்த கதி - பரபரப்பு காட்சிகள்
மிசோரம் மாநிலத்தில் மியான்மர் நாட்டு ராணுவ விமானம் நொறுங்கி விழுந்து 8 பேர் காயமடைந்தனர்.மியான்மர் நாட்டைச் சேர்ந்த ராணுவ விமானம், மிசோரம் மாநிலம் லெங்புயி விமான நிலையத்திற்கு அருகே விழுந்தது. இதில், விமானி உட்பட 13 பணியாளர்கள் பயணம் செய்தனர். காயமடைந்த 8 பேர் மிசோரமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மரில்
அண்மைக்காலமாக ராணுவத்திற்கும், போராளி குழுக்களுக்கும் இடையே உள்நாட்டு கலவரம் நீடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க மிசோரமிற்குள் புகுந்த மியான்மர் ராணுவ வீரர்களை மீட்க இந்த விமானம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மிசோரமில் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு, பாதையில் இருந்து விலகி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.