திருப்பதி லட்டு விவகாரம்.. "யாராக இருந்தாலும்..." - கொதித்தெழுந்த மத்திய அமைச்சர்

Update: 2024-09-20 15:11 GMT

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மிக தீவிரமான விவகாரம் என தெரிவித்துள்ளார். இந்துக்களின் புனித தலமாக விளங்கும் திருமலை திருப்பதி பிரசாதத்தில் மீன் மற்றும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பது இந்து சமூகத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது ஆட்சி காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்திருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமலை திருப்பதி டிரஸ்டில் இந்துக்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக்கப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ஜோசி இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதில் புதிய ஆந்திர அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைத்து புனிதமான இடங்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களை மாநில அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அவர் இந்து மத ட்ரஸ்டுகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்