ஆந்திர மாநிலம் விஜயவாடா சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆடியோ வெளியிட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா, ஆந்திர மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். அதில் 2 நாட்களுக்கு முன்னதாகவே வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் அரசை நிர்வகிப்பவர்களும், அதிகாரிகளும் ஹைதராபாத்துக்கு சுற்றுப்பயணம் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் தொகுதி மழையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் மக்களுக்கு உதவுவதை மறந்து விட்டு ஹைதராபாத்தில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்க தொடங்கிய பின்பு, அரசு நிர்வாகம் விழித்துக் கொண்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டதாகவும் ரோஜா தெரிவித்துள்ளார்.