"ஓட்டு ரூ.3000... வரல காசு; போடு சார் கேசு..!" YSR ஆபீஸை சுத்துப்போட்ட மக்கள்... கிறுகிறுத்த போலீசார்

Update: 2024-05-12 15:31 GMT

ஆந்திரப் பிரதேசத்தில், வாக்காளர் உரிமைத்தொகை தலா 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை எனக் கூறி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் நாளை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காக்கிநாடா மாவடத்தில் உள்ள பித்தாபுரம் தொகுதியில், நேற்றிரவு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், வாக்காளர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை எனக் கூறி, பித்தாபுரத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சிலருக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு பெரும்பாலானோரை ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த போலீசார், வாக்கிற்கு பணம் வாங்குவது சட்டப்படி குற்றம் என்று கூறியபோது, கோபமடைந்த பொதுமக்கள், மற்றவர்களுக்கு பணம் கொடுத்தபோது காவல் துறை என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்து சென்று விட்ட நிலையில், பணம் கிடைக்காத கோபத்தில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்