பாலைவனத்தில் துடித்த உயிர்... ஒற்றை வீடியோவால் பதறிய ஆந்திரா..!போராடி மீட்ட திக் திக் சம்பவம்

Update: 2024-07-17 17:38 GMT

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர், ஏஜென்ட் ஒருவர் மூலம் ஆடு மேய்க்கும் வேலைக்காக குவைத் சென்றிருந்தார். அவருக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவனம் ஒன்றில் கொட்டகை அமைத்து, ஆடுகள் மற்றும் வாத்துகளை மேய்க்கும் வேலையை குவைத் முதலாளி கொடுத்திருந்தார்.

பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லாமல் பாலைவனத்தில் தவித்த சிவா, தனது நிலையை வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோ வேகமாக ஆந்திர அரசின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் வெளிமாநில அணியினர் சிவாவை தொடர்பு கொண்டு, குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு தூதரகத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் அவர் விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, சொந்த ஊரை வந்தடைந்தார். தன்னை மீட்பதற்கு உதவிய அனைவருக்கும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்