ஆந்திர தேர்தல் வன்முறை.. - தலைமைச் செயலர், டிஜிபியை நேரில் அழைத்து கண்டித்த ECI

Update: 2024-05-17 02:28 GMT

ஆந்திராவில் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் முன்பு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்புடன் எடுக்குமாறு உத்தரவிட்டது. பல்நாடு மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பதி மாவட்ட எஸ்பியை இடமாற்றம் செய்தும், பல்நாடு மாவட்ட எஸ்பியை பணி இடை நீக்கம் செய்தும் உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், துறை ரீதியான நடவடிகைக்கும் ஆணையிட்டுள்ளது. மேலும், 12 காவல் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. வன்முறை தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து, எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2 நாட்களில் அறிக்கையை சமர்பிக்குமாறும் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் வன்முறை நடக்காமல் இருக்க, அடுத்த 15 நாட்கள் வரை 25 கம்பெனி துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு மாநில மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆணையிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்