கண்ணுக்கு முன் ஓடிய பிரபல நடிகரின் படம்..வெற்றிகரமாக பெண்ணுக்கு முடிந்த சர்ஜரி - மருத்துவ உலகை வியக்க வைத்த ஆபரேஷன்
ஆந்திராவில் சினிமா பார்த்தபடி இருந்த பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளனர் மருத்துவர்கள்...காக்கிநாடா ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்த அனந்த லட்சுமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையின் இடது பக்கத்தில் கட்டி இருந்த நிலையில், குறைந்த மயக்கத்தில் அனந்தலட்சுமி விழித்திருக்கும் போது அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனந்தலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்., காமெடி நடிகர் பிரம்மானந்தம் இணைந்து நடித்த 'அதுர்ஸ்' படத்தை டேபில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்...