"ஒரு குடும்பத்திடம் இருந்து ஜனநாயகத்தை விடுவிக்க போராடியவர்" - பிரதமர் மோடி புகழாரம்
அத்வானிக்கு வழங்கப்படும் பாரத ரத்னா விருது தேசமே முதன்மை என்ற சித்தாந்தத்திற்கான கவுரவம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் 68,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு பாஜக நிர்வாகிக்கும் கவுரவமான தினம் என குறிப்பிட்டார். இரண்டு எம்பிக்களை கொண்ட கட்சியை உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றியதற்கான மரியாதை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரே கட்சி, ஒரே குடும்பம் என்ற சிறையில் இருந்து இந்திய ஜனநாயகத்தை விடுவிக்க போராடியவர் அத்வானி என புகழ்ந்தார்.
வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணித்தவர்களை நாடு மறக்காது என்பதற்கு இந்த விருது சாட்சியாக திகழ்வதாக குறிப்பிட்டார்.