சூரியனை நெருங்க நெருங்க சர்ப்ரைஸ்... X கதிர்களை கிளிக் செய்த 'ஆதித்யா எல்-1' - இஸ்ரோ சொன்ன செய்தி

Update: 2023-11-09 10:56 GMT

லெக்ரேஞ்சியன் பாயிண்ட் 1-ஐ நோக்கி வெற்றிகரமாக பயணித்து வரும் 'ஆதித்யா எல்-1' விண்கலம், லேட்டஸ்ட் அப்டேட் ஆக சூரியனின் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.....

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சூரியனை நோக்கிய தனது பயணத்தை தொடங்கிய 'ஆதித்யா-எல்1' விண்கலத்தின்

புவி சுற்று வட்டப்பாதை உயரம் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 4 முறை உயர்த்தப்பட்டிருந்தது.

இதில் அடுத்த மிக முக்கிய கட்டமாக எதிர்பார்க்கப்பட்ட லெக்ரேஞ்சியன் பாயிண்ட் 1-ஐ நோக்கிய ஆதித்யா எல்-1-ன் விண்வெளிப்பயணம் செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை வெற்றிகரமாக தொடங்கியது.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே.. இரு கோள்களின் ஈர்ப்பு விசை சரிசமமாக... அதாவது பூஜ்ஜியமாக இருக்கும் லெக்ரேஞ்சியன் பாயிண்ட் 1ல் இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்படவுள்ளது. இதற்காக இந்த விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டு வருகிறது.

அந்த இடத்திற்கு செல்ல கிட்டத்தட்ட 110 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, வரும் ஜனவரி மாதம் முதல் வாரம் லெக்ரேஞ்சியன் பாயிண்ட் 1ஐ ஆதித்யா - எல்1 அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே...

பூமியை சூழ்ந்து இருக்கும் துகள்களை பகுப்பாய்வு செய்ய உதவும் விதமாக விண்கலத்தில் உள்ள Supra Thermal and Energetic Particle Spectrometer எனப்படும் ஸ்டெப்ஸ் என்ற கருவியில் உள்ள ஆறு சென்சார்கள்... தங்கள் ஆய்வு பணியை தொடங்கி இருந்தன.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனின் எக்ஸ் கதிர்களை ஆதித்யா எல்.1 விண்கலம் படமெடுத்து அனுப்பியிருப்பது தான் அது.

உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை அக்.29 ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி படமெடுத்து அனுப்பியுள்ளது.

இது சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்விற்கு உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்