கேரளாவில் காட்டில் புல் அறுக்க சென்றவரை புலி தாக்கி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள சுல்தான் பத்தேரி வாகேரி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ். வனப்பகுதியில் மாட்டிற்கு புல் அறுக்க சென்ற அவர், மாலை வரை வீடு திரும்பாததால் அவரது சகோதரர் தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில் தலை மற்றும் கால் சிதைந்த நிலையில், வனப்பகுதியில் பிரஜீஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்து, புலி தாக்கி கொன்றதையும், பாதி உடலை குதறி சாப்பிட்டு விட்டு புலி சென்றதையும் உறுதிசெய்தனர். கடந்த ஜனவரி மாதம் இதே பகுதியில் விவசாயியை கொன்ற புலி கூண்டுவைத்து பிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புலி ஒருவரை கொன்றுள்ள சம்பவம், இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.