கரும்புகையால் சூழ்ந்த மருத்துவமனை.. ஏணி வைத்து இறங்கிய நோயாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு

Update: 2023-12-14 13:55 GMT

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவர்கள் விரைவாக வெளியேறினர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெளியேற முடியாமல் தவித்த நோயாளிகளை, ஏணி மூலம் கீழே இறங்கச் செய்து வெளியேற்றினர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்