புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் உலா வந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் சுமார் 4 அடி நீள முதலை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதலையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அதன்படி, இன்று அதிகாலை முதலையை கூண்டு வைத்து பிடித்தனர்.