216 மணி நேரமாக தவிக்கும் 41 உயிர்கள்.. ஏக்கத்தில் இருந்த இந்தியாவுக்கு ஒரு நம்பிக்கை செய்தி

Update: 2023-11-20 09:27 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில், கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். கிட்டத்தட்ட 216 மணி நேரங்களைக் கடந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ், சில்க்யாரா சுரங்கப்பாதையை வந்தடைந்தார். அங்கு பிரதான நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள கோயிலில் அவர் பிரார்த்தனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் தீர்வை கண்டுபிடித்து தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். உணவு, மருந்து முறையாக வழங்கப்படுவதாகவும், தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்