3 மணி நேரம்..! 117 மி.மீ பதிவு.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

Update: 2023-11-23 03:26 GMT

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா குன்னம்தானாவில் மூன்று மணி நேரத்தில் 117.4 மி.மீ அளவு மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொன்முடி சுற்றுலா மையம் மூடப்பட்டதுடன், மலையோர சுற்றுலா பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்