நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள்... மக்களவையில் மத்திய அமைச்சர் அதிர்ச்சி ரிப்போர்ட் - மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கியது இவ்வளவுதானா?

Update: 2023-07-30 03:09 GMT

நாடு முழுவதும் கட்டமைக்கப்படும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தற்போதைய நிலை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...

PMSSY திட்டத்தின் கீழ் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 157 செவிலியர் பயிற்சி கல்லூரிகளும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. 75 அரசு பொது மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுகின்றன.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இந்த தகவல்களை தெரிவித்தார்.

ஆயிரத்து 618 கோடி ரூபாய் செலவில் ஆந்திர பிரதேசம், மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டது. இதுவரை ஆயிரத்து 319 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியுள்ளது.

ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டது. இதுவரை 12.35 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டு, முதலீட்டுக்கு முந்தைய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அசாமின் கவுகாத்தி எய்ம்ஸில் 90 சதவீத கட்டுமான பணிகளும், ஜம்மு எய்ம்ஸில் 82 சதவீத கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளன.

தெலுங்கானாவின் பீபி நகர் எய்ம்ஸின் 24 சதவீத கட்டுமான பணிகள், 379 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

பாட்னா எய்ம்ஸ், ராய்பூர் எய்ம்ஸ், போபால் எய்ம்ஸ்,

புவனேஸ்வர் எய்ம்ஸ், ஜோத்பூர் எய்ம்ஸ், ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு, முழு செயல்பாட்டில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்