போர் சூழலிலும் சொன்ன சொல் மாறாத ரஷ்யா... இந்தியா வெளியிட்ட முக்கிய தகவல்!
இந்தியாவுக்கு எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணையின் சாதனங்களை ரஷ்யா வழங்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் சூழலிலும் சொன்ன சொல் மாறாத ரஷ்யா... இந்தியா வெளியிட்ட முக்கிய தகவல்...
இந்தியாவுக்கு எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணையின் சாதனங்களை ரஷ்யா வழங்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக எஸ்-400 ஏவுகணை சாதனங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க 2018ம் ஆண்டு இருநாட்டுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏவுகணையின் முதல் தொகுதி சாதனங்களை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கியது. இதற்கிடையே, உக்ரைன் போரால் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளன. இதனால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய ஏவுகணை சாதனங்களை ரஷ்யா வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், இந்தியாவுக்கான ஏவுகணை சாதனங்களை வழங்குவதில் எந்த வித தடையும் ஏற்படாது என ரஷ்யா கூறி வந்தது. இந்த நிலையில் ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு எஸ்- 400 வான் பாதுகாப்பு ஏவுகணைக்கான எஞ்சின் மற்றும் பயிற்சி சாதனங்களை ரஷ்யா வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.