கொளுத்தி எடுக்கும் வெப்பம்... அதிகரிக்கும் தீ விபத்துகள் - தலைநகருக்கு அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் பதிவாக்கும் அதிக வெப்பத்தின் தாக்கத்தினால் தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-04-15 10:02 GMT
கொளுத்தி எடுக்கும் வெப்பம்... அதிகரிக்கும் தீ விபத்துகள் - தலைநகருக்கு அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் பதிவாக்கும் அதிக வெப்பத்தின் தாக்கத்தினால் தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

கோடை காலத்தை ஒட்டி வடமாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. டெல்லியில் தினசரி வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருவதால் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடிக்கடி தீவிபத்துகளும் ஏற்பட்டு டெல்லி மக்களை மேலும் வதைத்து வருகிறது. கடுமையான வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் குப்பை கிடங்குகள், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தீப்பற்றி எரிகின்றன. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் தீவிபத்து அதிகரித்துள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 15 ஆயிரத்து 687 ஆக தீ விபத்துகளின் அழைப்பு இருந்ததாகவும், ஆனால் நடப்பு ஆண்டில் ஏப்ரல் வரை ஆயிரத்து 743 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் மின்கசிவால் ஏற்படுவதாகவும் தீயணைப்புத்துறை கூறியுள்ளது .
Tags:    

மேலும் செய்திகள்