60 அடி நீள இரும்புப் பாலம் திருட்டு - சிக்கிய அரசு அதிகாரிகள்!
பீகாரில், இரும்புப் பாலம் திருடுபோன வழக்கில், அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.ரோக்தாஸ் மாவட்டம் அமியாவார் கிராமத்தில்...
60 அடி நீள இரும்புப் பாலம் திருட்டு - சிக்கிய அரசு அதிகாரிகள்!
பீகாரில், இரும்புப் பாலம் திருடுபோன வழக்கில், அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.ரோக்தாஸ் மாவட்டம் அமியாவார் கிராமத்தில், 500 டன் எடை கொண்ட 60 அடி நீள இரும்புப் பாலம் ஒன்று இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தை சிலர் ஜேசிபி வாகனம், கேஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தீவிர விசா ரணைக்குப் பிறகு, தற்போது 8 பேரை கைது செய்துள்ளனர். இதில் நீர்ப்பாசனத்துறை ஊழியர் அரவிந்தகுமார், துணை வட்ட அதிகாரி ராதே ஷியாம் சிங் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து இரும்புப் பாலத்தை வெட்டியெடுத்து திருடிச் சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஜேசிபி வாகனம், கார், கேஸ் கட்டர்கள், திருடு போன இரும்புத் துண்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.