ஹிஜாப், ஹலால் பிரச்சினையை தொடர்ந்து இப்போது புது பிரச்சினை - கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால் மாமிச பிரச்சனை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2022-04-05 16:29 GMT
கர்நாடகத்தில் ஹிஜாப், ஹலால் மாமிச பிரச்சனை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கர்நாடகாவில் இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே குடியிருப்பு பகுதிகளில் கோவில்கள், மசூதிகள் ஆகியவற்றில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் என ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிபெருக்கிகளை மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் அனைத்து கோவில்களிலும் தினசரி அதிகாலையில் ஒலிபெருக்கி மூலம் வேத மந்திரங்கள் மற்றும் பாடல்களை இசைப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் இந்து கோவில்களில் இஸ்லாமியர்கள் கடை போட கூடாது, இஸ்லாமிய வணிகர்களிடம் பொருட்களை வாங்க கூடாது என பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசிவரும் இந்து அமைப்பினர் தற்போது இந்த ஒலி பெருக்கி விவகாரத்திலும் தலையிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்