"ஷீ ஆட்டோ" - மாநிலத்தில் முதன்முறையாக பெண்களுக்கான ஆட்டோ ஸ்டாண்டு

பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பெண் ஓட்டுநர்களுக்கான "ஷீ ஆட்டோ" ஸ்டாண்டு ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-03 11:38 GMT
பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பெண் ஓட்டுநர்களுக்கான "ஷீ ஆட்டோ" ஸ்டாண்டு ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆட்டோ ஸ்டாண்டை அந்த தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் மேயர் தொடங்கி வைத்தனர். பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் ஷீ ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. பூமன கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக ஆண்கள் ஆட்டோ ஸ்டாண்டை பெண் ஓட்டுநர்கள் பயன்படுத்தி வந்ததால், மாநிலத்திலேயே முதன் முதலாக திருப்பத்தியில் பெண் ஓட்டுநர்களுக்கான ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்