இறந்த மகளை தோளில் தூக்கி 10கிமீ நடந்த தந்தை!

இறந்த மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி செல்லும் தந்தையின் வீடியோ உருக்கமடைய செய்துள்ளது.

Update: 2022-03-26 08:20 GMT
சுர்குஜா மாவட்டம் ஆம்தாலா கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வர் தாஸ், உடல்நிலை சரியில்லாத தனது 7 வயது மகளை லகம்பூரியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிறுமி சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

சிறுமி உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், சடலத்தை மருத்துவமனையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு தோளில் சுமந்தபடி ஈஸ்வர் தாஸ் எடுத்து வந்துள்ளார். சடலத்தை சுமந்தபடி ஈஸ்வர் தாஸ் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

இது குறித்து அறிந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் டியோ, ஈஸ்வர் தாஸிற்கு மருத்துவ ஊழியர்கள் உதவ முன்வராதது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி செல்லும் தந்தையின் வீடியோ மிகுந்த வருத்தத்தை அளித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்