மீண்டும் பாம்பு பிடிக்க தொடங்கிய பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ்

கேரளாவில் பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ், மீண்டும் பாம்பு பிடிக்க துவங்கியுள்ளார்.

Update: 2022-03-07 23:41 GMT
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ், வெறுங் கையாலேயே பாம்பு பிடிப்பதில் வல்லவர். கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி அருகே, 7 அடி நீள நாகப்பாம்பின் வாலைப் பிடித்து சாக்கில் அடைக்க முயன்றபோது அவரது தொடையில் பாம்பு கடித்தது. தொடையைக் கடித்துப் பிடித்திருந்த பாம்பை, பிடித்து ஒரு டப்பாவில் அடைத்து விட்டு மயங்கினார். மிகவும் அபாயகரமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் பாம்பு பிடிக்க தொடங்கியுள்ளார். 

ஆலப்புழாவிலுள்ள சாரமூடு என்ற இடத்தில் முகேஷ் என்பவரின் வீட்டில் நாகப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்றார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது இருந்த நாகப்பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வனப்பகுதியில் விட்டார். வாவா சுரேஷ் குணமடைந்த பின் மீண்டும், பாம்பு பிடிக்க வருவதை அறிந்த மக்கள், அவரை பார்க்க திரண்டிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்