ஹிஜாபை அகற்ற வலியுறுத்திய கல்லூரி நிர்வாகம்.. விரிவுரையாளர் பணியை துறந்த பெண்

கர்நாடாகாவில் ஹிஜாபை அகற்றும்படி தனியார் கல்லூரி நிர்வாகம் கூறியதால், தன்மானத்தை இழிவுப்படுத்துவதாக கூறி பெண் விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2022-02-18 11:12 GMT
கர்நாடாகாவில் ஹிஜாபை அகற்றும்படி தனியார் கல்லூரி நிர்வாகம் கூறியதால், தன்மானத்தை இழிவுப்படுத்துவதாக கூறி பெண் விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். துமாக்குரு மாவட்டத்தில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் சாந்தினி நஸ் என்பவர் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய கூடாது என கல்லூரி முதல்வர் கூறியதால் தனது பணியை சாந்தினி நஸ் ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற நிலையில், தற்பொழுது அதை அகற்றும்படி கூறுவது தன்மானத்தை இழிவுப்படுத்தும் செயல் என்றார். அரசியலமைப்பு சட்டத்தின் மத உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்ற அவர், கல்லூரி நிர்வாகத்தின் ஜனநாயகமற்ற செயலை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். பெண்ணின் ராஜினாமா குறித்து பேசிய கல்லூரி முதல்வர் மன்ஜுநாத், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஹிஜாப் அணிய வேண்டாம் என்றும், ஆசிரியர் ஹிஜாப் அணிந்து வந்தால் மாணவர்களும் அதை கடைப்பிடிப்பார்கள் என விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்