இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-06 15:54 GMT

வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு...

தேசியக் கொடியுடன் வானில் அணிவகுத்த சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள்...

பட்டாம்பூச்சி போல் சிறகடித்த விமானம்

பட்டாம்பூச்சி போன்று வானில் சாகசம் செய்த ஹார்வர்ட் ரக விமானம்..

ALH MK-I ஹெலிகாப்டர்கள் வானில் இதயத்தை செதுக்கியதைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்...

ரயில் சேவை - மக்கள் கடும் அவதி

மெரினா செல்ல போதிய ரயில் சேவை இன்றி வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பரிதவித்த பொதுமக்கள்...

விடுமுறை தின அட்டவணையில் ரயில்கள் இயக்கப்பட்டதால் கடும் அவதி...

மெரினாவில் இருந்து திரும்பும்போதும் ரயில் நிலையங்களில் உரிய ஏற்பாடுகள் இல்லை என மக்கள் வேதனை...

வான் சாகசத்தை காண வந்த 4 பேர் பலி

கடும் வெயில், மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 4 பேர் உயிரிழப்பு...

உடல் நலம் பாதிக்கப்பட்ட 90க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை...

வான் சாகசத்தை காண வந்த 2 பேர் பலி

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த கொருக்குபேட்டையை சேர்ந்த ஜான் என்பவர் வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழப்பு...

மயக்கம் அடைந்த திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பலி...

கடும் வெயிலால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை...

படிப்படியாக குறைந்த போக்குவரத்து நெரிசல்

விமான சாகச நிகழ்ச்சியால், ஸ்தம்பித்து கிடந்த சென்னை சாலைகள், மாலை 5 மணிக்கு மேல் சீரானது...

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசல் படிப்படியாக குறைவு...

சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை

நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க, சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் ஆலோசனை...

பயனுள்ள நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புவதாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று தகவல்...

போதைப் பொருள் - ஆளுநர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கஞ்சா தவிர்த்த ஏனைய போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றவில்லை...

சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று குற்றச்சாட்டு...

இந்திய அணி அபார வெற்றி

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி...

இந்திய அணி இன்று அபார வெற்றி..

Tags:    

மேலும் செய்திகள்