ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் - பின்னடைவை சந்தித்தது பாஜக
ராஜஸ்தான் மாநிலம் தரியாவாட் மற்றும் வல்லப்நகர் பகுதிகளில் நடைபெற்ற சட்டசபை இடைதேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
தரியாவாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 18 ஆயிரத்து 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு சுயேட்சை வேட்பாளர் 2 இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், பாஜக மூன்றாம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. அதேபோல் வல்லப்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர், போட்டியாளர்களை விட 20 ஆயிரத்து 400 வாக்குகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் உள்ள நிலையில்,பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.