சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு விவகாரம் - கேரள அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம்

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு விவகாரம் - கேரள அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம்

Update: 2021-10-28 21:25 GMT
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு விவகாரம் - கேரள அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம் 

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடர்பாக கேரள அரசையும், காவல்துறையையும், அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.ஆன்லைன் முன்பதிவு முறை காரணமாக சபரிமலையில், பக்தர்கள் சகஜமாக தரிசனம் செய்ய இயலவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நடைமுறைக்கு எதிராக பலர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம், கேரள அரசால் அமலாக்கப் பட்டுவரும் ஆன்லைன் முன்பதிவு முறையை கடுமையாக விமர்சித்தது. அப்போது, உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டு வருவதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அனுமதி குறித்து ஆய்வு செய்ய உத்தவிட்ட நீதிபதிகள், ஆன்லைன் முன்பதிவு தொடர்பாக, கேரள அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தது.


ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவம்பர் 3 தேதி  சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம்  என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் நடை கடந்த 16 தேதி மாலை திறக்கப்பட்டது. கடந்த 16 தேதி முதல் கேரளா மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் பம்பையில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வருகின்ற 3 ஆம் தேதி  சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு  வரும் பக்தா்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தேவசம் போர்டு கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்