"எல்இடி மூலம் ரூ.1000 கோடி சேமிப்பு" - பிரதமர் மோடி
எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, 75 மாவட்டங்களைச் சேர்ந்த 75,000 பயனாளிகளுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் டிஜிட்டல் வீட்டு சாவிகளை வழங்கினார்.
ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய அவர், லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி மற்றும் காசியாபாத் நகரங்களுக்கு எலக்ட்ரிக் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய மோடி, ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 80% பெண்களே உரிமையாளர்கள் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
2014 முதல் இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மோடி, அவற்றில் 50 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கியதாக கூறினார்
எல்இடி தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 750 கிலோ மீட்டர் அளவுக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவடைந்து இருப்பதாகவும், மேலும் ஆயிரம் கிலோமீட்டர் மெட்ரோ வழித்தட பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.