"மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை" - வழக்கு ஒன்றில் கேரள நீதிமன்றம் தீர்ப்பு
கேரளாவில் ஒரு வழக்கு விசாரணையின் இறுதியில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளாவில் ஒரு வழக்கு விசாரணையின் இறுதியில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஹென்றி தாமஸ் என்பவர் பையனூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பாதிரியார் ஒருவர் தனக்கு இலவசமாக வழங்கிய நிலத்தில் தனது பணத்தில் கட்டப்பட்ட வீட்டை தனது ஒரே மகளின் கணவர் டேவிட் ரபேல் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த மனுவின் தீர்ப்பில், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை என தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, மாமனாரின் வீட்டில் குடியிருக்க உரிமை கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மருமகன் டேவிட் ரபேல் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அனில் குமார், மாமனாரின் சொத்தில் மருமகனுக்கு உரிமையில்லை என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என கூறியது.