விவசாயிகளால் முடங்கிய சுங்கச்சாவடிகள் - சுங்கக்கட்டணத்தில் ரூ,814 கோடி இழப்பு

விவசாயிகளின் போராட்டத்தினால் வடமாநிலங்களில் இயங்காத சுங்கச்சாவடிகளால் 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Update: 2021-08-05 14:58 GMT
விவசாயிகளின் போராட்டத்தினால் வடமாநிலங்களில் இயங்காத சுங்கச்சாவடிகளால் 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கொரோனா பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளின் காரணமாக சுங்கக்கட்டணம் வசூலில் 3 ஆயிரத்து 512 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தினால் 58 சுங்கச்சாவடிகள் முடங்கியதாகவும், அதனால் 814 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

Tags:    

மேலும் செய்திகள்