முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை - ஆளுநர் பதவி பிரதமானம் செய்து வைத்தார்

கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார்.

Update: 2021-07-28 07:32 GMT
கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக 61 வயதான பசவராஜ் பொம்மை பாஜக மேலிடத்தால் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் தவார் சந்த் கெலாட், பசவராஜ் பொம்மைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பசவராஜ் முதலமைச்சராக உறுதி மொழி ஏற்ற மேடையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இடம்பெற்றிருந்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில்,  மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அருண்சிங் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்