"மேகதாது திட்டத்தை தொடங்க வேண்டாம்"; "தமிழக அரசு, கர்நாடகாவிடம் தெரிவித்தது" - மத்திய ஜல் சக்தி அமைச்சர் தகவல்

மேகதாது திட்டத்தை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்து விட்டதாக ஜூலை 20 ஆம் தேதியிட்ட கடிதத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் கூறியுள்ளார்.

Update: 2021-07-27 04:45 GMT
மேகதாது திட்டத்தை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்து விட்டதாக ஜூலை 20 ஆம் தேதியிட்ட கடிதத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக, மத்திய ஜல் சக்தி அமைச்சர்  கஜேந்திர சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர்,  தமிழகம் - கர்நாடக அரசுகளுக்கு இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி புதிய நீர்த்தேக்கம் மைசூர் அரசு கட்ட விரும்பினால், அதன் முழு திட்டத்தையும் சென்னை அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலை பணி தொடங்குவதற்கு முன் பெற வேண்டும் என்றும் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. 2019 ஜனவரியில் விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது என்றும், அதன் பிரதிகள் கூட்டு பாசன மாநிலங்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேகதாது திட்டத்தை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்து விட்டதாக ஜூலை 20 ஆம் தேதியிட்ட கடிதத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது எனவும் கஜேந்திர சிங் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்