"தந்திரமான வேலைகளில் ஈடுபடுகிறது" வாட்ஸ் அப் நிறுவனம் மீது மத்திய அரசு புகார்
தங்களது புதிய கொள்கைகளை பயனாளர்கள் ஏற்க தந்திரமான வேலைகளில், வாட்ஸ் ஆப் நிறுவனம் ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.
"தந்திரமான வேலைகளில் ஈடுபடுகிறது" வாட்ஸ் அப் நிறுவனம் மீது மத்திய அரசு புகார்
தங்களது புதிய கொள்கைகளை பயனாளர்கள் ஏற்க தந்திரமான வேலைகளில், வாட்ஸ் ஆப் நிறுவனம் ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.பிரமாண பத்திரத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.தங்களது புதிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு, பயனாளர்களுக்கு தினந்தோறும் அறிவிப்புகளை செயலியில் அனுப்புவதோடு, இத்தகைய உத்திகள் மூலமாக பயனாளர்கள்,கட்டாயம் ஏற்கும்படி அந்நிறுவனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனை தடுக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு கோரியுள்ளது.மத்திய அரசு கொண்டு வைத்திருக்கக்கூடிய தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கு முன்பாக அத்தனை பயனாளர்களும், தங்களது புதிய கொள்கைகளை ஏற்க வைக்கும் நோக்கில் அந்நிறுவனம் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கைகள், மத்திய அரசு கொண்டு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக உள்ளதாகவும் அதில் இடம்பெற்றுள்ளது.