யாஸ் புயலை எதிர்கொள்ள நடவடிக்கை - பிரதமர் அதிரடி உத்தரவு
யாஸ் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்
யாஸ் புயலை எதிர்கொள்ள நடவடிக்கை - பிரதமர் அதிரடி உத்தரவு
யாஸ் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.யாஸ் புயல் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் 46 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 13 குழுக்க25ஆம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு சென்று வர அனுமதி இல்லை - தமிழக அரசுள் புயல் தாக்க உள்ள பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள், விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். மேலும், மீட்பு, தேடுதல் பணிகளை மேற்கொள்ள கடற்படை, கடலோர காவல்படையின் கப்பல்களையும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்த உள்ளதாகவும் உயரதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, கடலோரங்களில் வசிக்கும் மக்களை, உரிய நேரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். மின்சாரம், தொலைத்தொடர்பு இணைப்புகளை நிறுத்தி வைக்கும் காலத்தை குறைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.